சோழநாட்டுத் திருப்பதிகள்  –  40

ஸ்ரீரங்கம் -  ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக “கோயில் “ மூலவர் -  ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ( ஆதிசேஷ சயனத் திருக்கோலம் )

திருக்கோழி ( உறையூர் ) - திருச்சி .  மூலவர் – அழகிய மணவாளப் பெருமாள், நின்ற திருக்கோலம்.

திருக்கரம்பனூர் ( உத்தமர் கோயில் ) :   மூலவர்  -  புருஷோத்தமன், புஜங்கசயனம், கிழக்கே நின்ற திருக்கோலம்.

திருவெள்ளறை ( வேதகிரி, ச்வேதகிரி ) :  .  மூலவர் – புண்டரிகாக்ஷன், செந்தாரமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம்.

திரு அன்பில் ( அன்பில் ) :    மூலவர்  - வடிவழகிய நம்பி, புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

திருப்பேர் நகர் ( கோயிலடி, அப்பக்குடத்தான் )  :   மூலவர்  -  தோஹர்  - திருக்காட்டுப்பள்ளி  -   மூலவர்  -அப்பக்குடத்தான், அப்பாலா ரெங்கநாதன்.

திருக்கண்டியூர்   :  மூலவர்  -  ஹரசாபவிமொசனப் பெருமாள்.  நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

திருக்கூடலூர் (  ஆடுதுறைப் பெருமாள் கோயில் )   -   மூலவர்  -  வையங்காத்த பெருமாள், உய்யவந்தார், நின்ற திருக்கோலம்.

திருக்கவித்தலம் ( கபிஸ்தலம் ) - மூலவர் – கஜேந்திர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

திருப்புள்ளம்பூதங்குடி ( புள்ளபூதங்குடி )  :   மூலவர்  - வல்வில் ராமன், கிழக்கே திருமுக மண்டலம்.

திரு ஆதனூர் : மூலவர் – ஆண்டளக்குமையன், கிழக்கே திருமுக மண்டலம்.

திருக்குடந்தை   ( சாரங்கபாணி சுவாமி கோயில் )  மூலவர்  - சாரங்கபாணி, கிழக்கே திருமுக மண்டலம்.

திருவிண்ணகர் ( ஒப்பிலியப்பன் கோயில்  ) :  மூலவர்  - ஒப்பிலியப்பன், கிழக்கே திருமுக மண்டலம்.

திருநறையூர் ( நாச்சியார் கோயில் ) :   மூலவர்  - ஸ்ரீநிவாசன், திருநறையூர் நம்பி, வாசுதேவன் என்ற பெயர்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம்.

திருச்சேறை ( பஞ்ச ஸார ஷேத்ரம் ) : மூலவர் – ஸாரநாதன், நின்ற திருக்கோலம்.

திருக்கண்ணமங்கை : மூலவர் – பக்தவத்சல பெருமாள், நின்ற திருக்கோலம்.

திருக்கண்ணபுரம் -  மூலவர் – நீலமேகப் பெருமாள்.கிழக்கே திருமுக மண்டலம்.

திருக்கண்ணங்குடி ( க்ருஷ்ணாரண்ய ஷேத்திரம்  ) : மூலவர் – லோகநாதன், நின்ற திருக்கோலம்.

திருநாகை ( நாகபட்டினம் ) :மூலவர் – நீலமேகப் பெருமாள்.

திருத்தஞ்சை மாமணிக் கோயில் ( தஞ்சாவூர் )

1) தஞ்சை மாமணிக்கோயில் – மூலவர்  - நீலமேகப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்.  2)  மணிக்குன்றம் : மூலவர் –

மணிக்குன்றப் பெருமாள், வீற்றிருந்த  திருக்கோலம்  3)  தஞ்சையாளி நகர்.  மூலவர்  - நரசிம்மன், வீற்றிருந்த  திருக்கோலம்

திருநந்திபுர விண்ணகரம் ( நாதன் கோயில், தக்ஷின ஜகன்நாதம், ஸ்ரீநிவாஸ ஸ்தலம்  )மூலவர் – ஜகந்நாதன்,  வீற்றிருந்த  திருக்கோலம்  .

திருவெள்ளியங்குடி ( வெள்ளியங்குடி ) : மூலவர் - கோலவில்லி ராமன், கிழக்கே திருமுக மண்டலம்.

திருவழுந்தூர் ( தேரழுந்தூர் ) : மூலவர்  - தேவாதிராஜன், நின்ற திருகோலம்.

திருச்சிறுபுலியூர் ( சிறுபுலியூர் ) : மூலவர் அருள்மாகடல், புஜங்கசயனம், தெற்கே திருமுகமண்டலம்.

திருத்தலைச் சங்க நாண்மதியம் ( தலைச்சங்காடு ) : மூலவர் – நான்மதியப் பெருமாள், நின்ற திருக்கோலம்.

திரு இந்தளூர் ( மயிலாடு துரை, திருவிழு ந்தூர் ) : காவேர்க்கு அக்கரை.மூலவர் – பரிமள ரங்கநாதன், வீரசயணம், கிழக்கே திருமுக மண்டலம்.

திருகாவலம்பாடி ( திருவாங்கூர் ) : மூலவர் – கோபாலகிருஷ்ணன், நின்ற திருக்கோலம்.

திருகாழிச் சீராம விண்ணகரம் ( சீர்காழி ) : மூலவர் – த்ரிவிக்ரமன், நின்ற திருக்கோலம்.

திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் ) : குடமாடு கூத்தர் கோயில் என்றே அழைக்கபடுகின்றது . மூலவர்  - குடமாடுகூத்தன், வீற்ற்ருந்த திருக்கோலம்.

திருவன்புருடோத்தமான் ( திருநாங்கூர் ) : மூலவர் – புருஷோத்தமன், நின்ற திருக்கோலம்.

திருசெம்பொன்செய் திருக் கோயில் ( திருநாங்கூர் ) : மூலவர் – பேரருளாளன், நின்ற திருகோலம்.

திருமணிமாடக் கோயில் ( திருநாங்கூர் ) : மூலவர் – நாராயணன், வீற்றிருந்த திருக்கோலம்.

திருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் ) : மூலவர் – வைகுந்த நாதன், உபய நாச்சிமார்கள்.

திருவாலி : மூலவர் – லக்ஷ்மி நரசிம்மர், வீற்றிருந்த திருக்கோலம்.       திருநகரி  மூலவர்  - வேதராஜன்,  வீற்றிருந்த திருக்கோலம்.

திருதேவனார் தொகை ( கீழச் சாலை ) : மூலவர்  - தெய்வ நாயகன், நின்ற திருக்கோலம்.

திருத்தெற்றியம்பலம்  :  பள்ளிகொண்ட பெருமாள் என்றே பிரசித்தம்.  மூலவர் – செங்கண்மால்,  புஜங்கசயணத் திருகோலம்.

திருமணிக்கூடம் ( திருநாங்கூர் ) : மூலவர் – வரதராஜப் பெருமாள், நின்ற திருக்கோலம்.

திருவெள்ளக்குளம் ( அண்ணன் கோயில் ) : மூலவர் – ஸ்ரீநிவாசன், நின்ற திருக்கோலம்.

திருப்பார்த்தன்பள்ளி ( திருநாங்கூர் ) : மூலவர் – தாமரையாள் கேள்வன், நின்ற திருக்கோலம்.

திருச்சித்ரக்கூடம் ( சிதம்பரம் ) : தில்லை நடராஜர் கோயிலுக்குள் உள்ளது. மூலவர் – கோவிந்தராஜன்.  வீற்றிந்த கோலம்